தோனி தயாரிப்பில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்
ADDED : 1001 days ago
கடந்த சில வருடங்களில் நம்பிக்கை தரும் இளம் நாயகனாக முன்னேறி வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். தான் நடிக்கும் படங்களின் கதைகளை கவனமாக தேர்வு செய்து, பெரும்பாலும் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறார். சமீபத்தில் திருமணமான சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக டீசல், நூறு கோடி வானவில், ஸ்டார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் அடுத்ததாக பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி மற்றும் அவரது மனைவி ஆகியோர் புதிதாக தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் ஹரிஷ் கல்யாண். ரமேஷ் தமிழ்மணி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 23ம் தேதி துவங்கும் என சொல்லப்பட்டு வருகிறது.