பி.டி. சாராக மாறிய ஆதி
ADDED : 1013 days ago
இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. அன்பறிவு படத்திற்கு பின் அவர் நாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார். அனிகா சுரேந்திரன், காஷ்மீரா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார். வேல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஆதியின் 7வது படமாக உருவாகும் இந்த படம் இதுநாள் வரை பெயர் வைக்காமல் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பி.டி. சார் (PT Sir) என பெயரிட்டு முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். இதில் ஆதி கையில் பேட், பால் போன்றவற்றை வைத்துள்ளார். இந்த படத்திற்கு ஆதியே இசையும் அமைக்கிறார்.