மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
963 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
963 days ago
விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாரிசு'. இப்படம் தமிழில் வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகே தெலுங்கில் வெளியானது. தமிழில் கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் அதன் பின் தெலுங்கில் வெளியானால் அது படத்தின் வசூலை பாதிக்குமோ என்று அச்சப்பட்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தெலுங்கு ரசிகர்களுக்குப் படம் பிடித்துள்ளது என்பது அப்படத்திற்குக் கிடைத்த வசூலை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.
நான்கு நாட்களில் இப்படம் தெலுங்கில் சுமார் 20 கோடியை வசூலித்துள்ளதாம். அதில் பங்குத் தொகையாக மட்டும் சுமார் 11 கோடி கிடைத்துள்ளது என்கிறார்கள். படத்தின் தெலுங்கு உரிமை 14 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதால் படம் லாபத்தைப் பெற இன்னும் 3 கோடி வசூலித்தாக வேண்டும். அதே சமயம் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இப்படம் லாபத்தைத் துவக்கிவிட்டது என்று சொல்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தமாக 'வாரிசு' படம் 210 கோடி வசூலித்துள்ளது என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
963 days ago
963 days ago