உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் தவறி விழுந்து ஒருவர் பலி

ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் தவறி விழுந்து ஒருவர் பலி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஏஆர்ஆர் பிலிம்சிட்டி என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்கே படப்பிடிப்புகளும் நடக்கின்றன. சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்திற்கான படப்பிடிப்புக்கு இந்த ஸ்டுடியோவில் செட் அமைக்கும் பணி நடக்கிறது. படப்பிடிப்பிற்கு 40 அடி உயரத்தில் மின்விளக்கு பொருத்தும் பணியில் லைட் மேன் ஒருவர் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராவிதமாக அவர் தவறி விழுந்தததில் உயிரிழந்தார். விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !