மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
964 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
964 days ago
சினிமாவை பொறுத்தவரை நாயகன் நாயகி மட்டுமல்லாமல் இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும்போதும் அவர்களது காம்பினேசன் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றால் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி அழகாக ஒர்க் அவுட் ஆனது என்று சொல்வார்கள். ஆனால் தனக்கும் ராம்சரணுக்குமான நட்பில் பிசிக்ஸ் வொர்க் அவுட் ஆகி உள்ளது என்று கூறியுள்ளார் நடிகர் ஜூனியர் என்டிஆர்.
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் சம முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். படத்தில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கடந்த மூன்று தலைமுறையாக இருவரது குடும்பத்திற்கும் ஒரு பகை இருப்பது போன்ற தோற்றமே தெலுங்கு திரை உலகில் நிலவி வருகிறது.
சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா ஆகிய இரு படங்களும் வெளியானபோது கூட இங்கே அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது போல அங்கேயும் கருத்து மோதல்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இந்த நிலையில் மூன்று தலைமுறை பகையையும் தாண்டி எப்படி உங்களால் நட்புடன் இருக்க முடிகிறது என்று சமீபத்தில் இருவரிடமும் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராம்சரண் கூறும்போது, “நீண்ட காலமாக எங்களது குடும்பத்திற்குள் பகை இருப்பது போல் பேசப்பட்டு வருவது என்னை வருத்தப்பட செய்தது. அதுமட்டுமல்ல எங்கள் இருவருக்கும் இடையே உள்ள போட்டி தான் எங்களை நட்பாக்கியது” என்று கூறினார்.
ஜூனியர் என்டிஆர் இதுபற்றி கூறும்போது, “எப்படி காந்தத்தின் எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என இயற்பியலில் சொல்லப்பட்டுள்ளதோ அதேபோலத்தான் எங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள எதிர் குணங்கள் எங்களது நட்பை எளிதாக்கிவிட்டன” என்று புதிய கோணத்தில் பதில் ஒன்றை அளித்தார்.
964 days ago
964 days ago