'தனி ஒருவன் 2' தாமதம் ஏன் - ஜெயம் ரவி
ADDED : 995 days ago
சகோதரர்களான இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி கூட்டணியில் வெளியான முக்கியமான படம் ‛தனி ஒருவன்'. அரவிந்த்சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்தனர். சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் துவங்கவில்லை. இந்த தாமதம் குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛தனி ஒருவன் 2விற்கான கதை தயாராக உள்ளது. அதுவும் அருமையாக வந்துள்ளது. 2019லேயே இந்த படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பு வந்ததால் தாமதம் ஆனது. விரைவில் தனி ஒருவன் 2வில் நடிக்க உள்ளேன்'' என்றார்.