கருணாஸ் மகள் திருமணம்
ADDED : 1020 days ago
காமெடி நடிகர் கருணாஸ், பின்னாளில் ஹீரோவாகவும் நடித்தார். பின்னர் அரசியலுக்கு சென்று சட்டசபை உறுப்பினராகவும் ஆனார். அவரது மனைவி கிரேஸ் ஒரு பாடகி. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
கருணாஸ் மகன் கென் கருணாஸ் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இசை அமைக்கவும் தொடங்கி உள்ளார். கருணாசின் மகள் பவுலின் மருத்துவம் படித்து டாக்டர் ஆனார். அவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ருத்விக் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இது காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. கிறிஸ்தவ முறைப்படி பெங்களூரில் உள்ள தேவாலயத்தில் நடந்த இந்த திருமணத்தில் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.