எனது முக்கியமான எதிரி அவன் தான்: கமல் பேச்சு
நடிகர் கமல்ஹாசன் சென்னையில் புத்தக விற்பனை நிலையத்தை துவங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அரசியலையும், கலாச்சாரத்தையும் தனித்தனியாக வைத்திருக்கக் கூடிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியதுதான் அரசியல். ஆள்பவர்கள் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது என நினைக்கிறேன். 'நாம் நியமித்தவர்கள் அவர்கள்' என்ற எண்ணம் மக்களுக்கு வரும்போது ஜனநாயகம் நீடூழி வாழும். ஒவ்வொருவரும் தன்னளவில் தலைவன் என்று நினைக்கும் பட்சத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாறும்.
இவ்வாறு அவர் பேசினார்.