எங்களை கண்டுகொள்வதேயில்லை : பிரவீன் பென்னட் வருத்தம்
ADDED : 971 days ago
சின்னத்திரை இயக்குநர் பிரவீன் பென்னட் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சீரியல் நடிகர்களுக்கு கிடைக்கும் புகழ் இயக்குநர்களுக்கு கிடைப்பதில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், 'சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் அதன் வெற்றிக்கு முதல் காரணம் இயக்குநர்கள் தான். அதற்கு பிறகுதான் நடிகர்கள். சின்னத்திரையை பொறுத்தமட்டில் சீரியல் இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுப்பதில்லை. அதேப்போல் சீரியல் நடிகர்/நடிகைகள் பேட்டி கொடுத்தால் ஊடகங்களில் வைரலாகிறது. ஆனால், இயக்குநர் பேட்டி கொடுத்தால் மக்கள் அதை புறக்கணிக்கின்றனர். இந்த நிலை எனக்கு வருத்தமளிக்கிறது' என அதில் பேசியுள்ளார்.