மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
956 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
956 days ago
1996ல் கமல்ஹாசனும், ஷங்கரும் இணைந்த முதல் படம் இந்தியன். அந்த படம் சூப்பர் ஹிட் ஆன போது அதன் பிறகு அவர்கள் இருவரும் எந்த படத்திலும் இணையவில்லை. 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது அவர்கள் இந்தியன் 2 படத்தின் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்தில் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சில விபத்துக்கள் காரணமாக தாமதமாகி வந்தது. அதன்பின் வழக்கு போன்ற பிரச்னைகளால் அந்தப்படம் நின்றுபோனது. அந்த வகையில் இந்தியன்-2 படம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் நடந்த படப்பிடிப்பு பின்னர் ஆந்திராவின் வனப்பகுதியில் நடந்தது. நேற்று முதல் சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதம் வரை தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்த உள்ளார் ஷங்கர். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை பகிர்ந்து, ‛‛மீண்டும் இந்தியன் 2 பட செட்டில்...'' என குறிப்பிட்டுள்ளார் ஷங்கர் .
956 days ago
956 days ago