கனிகா வெளியிட்ட ஹாட் புகைப்படம் : இப்பவும் ஹீரோயினா நடிக்கலாம்
ADDED : 960 days ago
தமிழில் பைவ்ஸ்டார் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கனிகா. அதன்பின் அஜித், மாதவன் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்தார். தற்போது எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்து, நடித்து வருகிறார். கனிகாவுக்கு 13 வயதில் மகன் இருந்தாலும் இன்றைய நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு பிட்னஸ் மெயிண்டெயின் செய்து வருகிறார். யோகா, வொர்க்-அவுட் என அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கனிகா போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. அதை பார்க்கும் சிலர் 'கனிகா இப்போதும் ஹீரோயினா நடிக்கலாம்' என அவர் அழகை வர்ணித்து வருகின்றனர்.