மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
920 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
920 days ago
'புஷ்பா 'படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான நடிகராகிவிட்ட அல்லு அர்ஜூன், தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிசீரிஸ் பிலிம்ஸ் புரொடக்ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார்.
இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் பூஷண் குமார், பிரனய் ரெட்டி வங்கா, இணை தயாரிப்பாளர் ஷிவ் சனானா, அல்லு அர்ஜூன் இணைந்து வெளியிட்டனர். இதுவும் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாராக இருக்கிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி 2025ம் ஆண்டு வெளியாகும் என்கிறார்கள். இது ஸ்டைலிசான ஹாலிவுட் ஹீரோக்கள் பாணியிலான படம் என்கிறார்கள். தற்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாகிறது.
920 days ago
920 days ago