மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
913 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
913 days ago
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல நடிப்பில் உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இம்மாதம் 29ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்தப்போகிறார்கள்.
இப்படத்தின் முதல் பாக இசை விழாவில் ரஜினி - கமல் கலந்து கொண்ட நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் இசை விழாவிலும் ரஜினியும், கமலும் பங்கேற்க உள்ளார்கள். மேலும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இந்தியா முழுக்க சென்று படத்தை விளம்பரப்படுத்தும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
913 days ago
913 days ago