திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் சம்யுக்தா-விஷ்ணுகாந்த்! வாழ்த்துகளை குவித்த ரசிகர்கள்
ADDED : 943 days ago
சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் விஜய் டிவியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அப்போது ஆரம்பித்த இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. கடந்த வருடம் சம்யுக்தா தனது பிறந்தநாளன்று விஷ்ணுகாந்துடனான தனது காதலை உணர்பூர்வமாக பதிவிட்டு உறுதி செய்தார். அதுமுதலே இந்த ஜோடிக்கு எப்போது கல்யாணம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விஷ்ணுகாந்த் - சம்யுக்தா திருமணம் சைலண்டாக நடந்து முடிந்துள்ளது. விஷ்ணுகாந்த் - சம்யுக்தாவின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.