மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
913 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
913 days ago
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. 1975ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக அப்படம் வெளிவந்தது.
நேற்று திடீரென 'சார்பட்டா பரம்பரை' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் என்ற அறிவிப்பு வெளியானது. இப்படி ஒரு அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், அதற்குள்ளாக 'சார்பட்டா பரம்பரை 2' படத்தை இயக்கி முடிப்பார் எனத் தெரிகிறது. கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் வரை நடக்கும் என்கிறார்கள். பா ரஞ்சித் இயக்கி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். கமல்ஹாசன் வரும் வரை காத்திருக்காமல் அதற்குள் 'சார்பட்டா பரம்பரை 2' படத்தை இயக்கி முடிக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம்.
முதல் பாகத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். அப்போது கொரோனா தாக்கம் இருந்ததால் அப்படி நடந்தது. அப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்று சொல்லப்பட்டது. இப்போது இரண்டாம் பாகத்தை தியேட்டர்களில்தான் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
913 days ago
913 days ago