தோனியை தொடர்ந்து பட தயாரிப்பாளரான இன்னொரு கிரிக்கெட் வீரர் ஜடேஜா
ADDED : 946 days ago
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி, தமிழில் எல்.ஜி.எம் என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.
இந்த நிலையில் தோனியை தொடர்ந்து சிஎஸ்கே வீரரான ஜடேஜாவும் ஒரு ஹிந்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார். அவர் தயாரிக்கும் படத்தில் ரஞ்சித் ஹூடா மற்றும் தீனா குப்தா ஆகியோர் நடிக்க, ஜெயந்த் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு பாச்சட்டார் கா சோரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.