சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் வடசென்னை-2
ADDED : 946 days ago
2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி உட்பட பலரது நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மேலும் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வடசென்னை-2 திரைப்படம் கண்டிப்பாக வெளிவரும் என்று தெரிவித்திருந்தார் தனுஷ். இந்த நிலையில் நேற்று பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை -2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து, தனுஷின் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் வடசென்னை- 2 படம் குறித்த செய்தியை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். அதோடு சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை அடுத்து வடசென்னை -2 படத்தை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்களும் பரவிக் கொண்டிருக்கிறது.