காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......!
கடந்த வாரம் போலவே இந்த வாரமும் ஓடிடியில் புதுவரவு படங்களுக்குப் பஞ்சமில்லை. சிறந்த கதையம்சம் கொண்ட மலையாள படம் முதல், மீண்டும் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டிய தமிழ் படம் வரை இந்த வாரம் வெளியாகியுள்ளது. அவை குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஹாட் ஸ்பாட் 2 மச்
புதுமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், நடிகை பிரியா பவானி சங்கர், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ரக்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஹாட் ஸ்பாட் 2 மச்'. பெண் இயக்குநர், தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போல், திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் நாளை (பிப்.20ம் தேதி) அமேசான் ப்ரைம், ஆஹா தமிழ், சிம்பிலி சவுத், லயன்ஸ்கேட் பிளே மற்றும் ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
லக்கி தி சூப்பர் ஸ்டார்
அறிமுக இயக்குநர் உதய் மகேஷ் இயக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாஷ், அனஸ்வரா நடிப்பில் உருவாகி உள்ள படம்' லக்கி தி சூப்பர் ஸ்டார்'. காமெடி அம்சம் கொண்ட இதில் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த படம் நாளை(பிப்.20ம் தேதி) நேரடியாக ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.
அமோஸ் அலெக்சாண்டர்(Amos Alexander)
மலையாள இயக்குநர் அஜய் ஷாஜி இயக்கத்தில் அஜூ வர்க்கீஸ், ஜெபர் இடுக்கி, தய்யனா ஹேமந்த், தாரா ஜோசப் நடிப்பில் வெளிவந்த க்ரைம் திரில்லர் திரைப்படம்' அமோஸ் அலெக்சாண்டர்(Amos Alexander)'. இந்த திரைப்படம் நாளை(பிப்.20ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஸ்ரீ சிதம்பரம்
தெலுங்கு இயக்குநர் வினய் ரத்னம் இயக்கத்தில், துளசி, நாயுடு மோராம், ஷங்கர் ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஸ்ரீ சிதம்பரம். இந்த படம் இன்று(பிப்.19ம் தேதி) ஈடிவி விண் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சதா பச்சா : தி ரிங் ஆப் (Chatha Pacha)
மலையாள இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில், நடிகர்கள் அர்ஜுன் அசோகன், ரோசன் மேத்யூ, விசாக் நாயர். இஷான் சவுகத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சதா பச்சா: தி ரிங் ஆப் (Chatha Pacha)'. குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று(பிப்.19ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தீர்த்தரூப தாண்டேயவரிகே
கன்னட இயக்குநர் ராமனஹள்ளி ஜெகன்நாதா இயக்கத்தில் நிகர் முகேஷ், ரச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தீர்த்தரூப தாண்டேயவரிகே. இந்த திரைப்படம் நாளை(பிப்.20ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
பாதி ராத்திரி
மலையாள இயக்குநர் பி.டி ரதீனா இயக்கத்தில், நவ்யா நாயர், செளபின் ஷாஹிர், ஆன் ஆகஸ்டின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த கிரைம் த்ரில்லர் திரைப்படம்' பாதி ராத்திரி(Paathi Rathiri)'. போலீஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நாளை (பிப்.20ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ராக் ஷசா
கன்னட மொழியில் வெளிவரும் கிரைம் வெப் தொடர் 'ராக் ஷசா'. சுவாரஸ்யமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டு, விறுவிறுப்பாக நகரும் இந்த தொடர் நாளை (பிப்.20ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கென்னடி
பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், சன்னி லியோன், ராகுல் பட் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்'கென்னடி'. கிரைம் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் நாளை(பிப்.20ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.