புதிய தொடர் 'ஆஹா கல்யாணம்: 20ம் தேதி முதல் ஒளிபரப்பு
ADDED : 937 days ago
விஜய் டிவியில் வருகிற 20ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் 'ஆஹா கல்யாணம்'. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரில் மவுனிகா, அனிதா வெங்கட், விக்ரம்ஸ்ரீ, அக்ஷயா கண்டமுதன், காயத்ரிஸ்ரீ, விபிஷ் அஸ்வந்த், உள்பட பலர் நடிக்கிறார்கள், பிரான்சிஸ் கதிரவன் இயக்குகிறார்.
தன் மூன்று மகள்களுக்கும் பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிற ஒரு தாயின் கதை. அந்த தாயாக மவுனிகா நடிக்கிறார். மவுனிகா ஆசைப்பட்ட மாதிரி அவருடைய மகள்களுக்கு திருமணம் நடக்கிறதா? அவருடைய கனவு நிறைவேறுமா? என்பதுதான் கதையின் கரு.