'மாவீரன்' படத்திற்கு கப்பல் செட்?
ADDED : 1016 days ago
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனும், கதாநாயகியாக அதிதி ஷங்கரும் நடித்து வருகிறார்கள். நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. கிளைமாக்ஸ் காட்சிக்காக புதுச்சேரியில் பிரமாண்டமான கப்பல் செட் உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் உடன் மிஷ்கினும் நடிக்கிறார். வரும் மார்ச் 21 தேதியுடன் மாவீரன் படத்தின் முழு படப்பிடிப்பு முடிவடைகிறது என தகவல் வெளியாகியுள்ளது.