மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் சிபி சக்ரவர்த்தி!
ADDED : 1189 days ago
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் டான் படத்தை இயக்கியவர் சிபி சக்ரவர்த்தி. இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இதையடுத்து அவர் ரஜினியை சந்தித்து கதை சொல்லி இருந்தார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு அவர் சொன்ன கதை திருப்தி இல்லை என்று ரஜினி தரப்பிலிருந்து சிபி சக்ரவர்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்த அவர், ரஜினிக்காக உருவாக்கிய அந்த கதையை தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மாவீரன் படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் அதன் பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார்.