விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்துள்ள குஜராத் மொழி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ADDED : 933 days ago
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகிய இருவரும் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக குஜராத் மொழியில் ‛சுப் யாத்ரா' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை தேசிய விருது பெற்ற மனிஷ் சயினி என்பவர் இயக்கி இருக்கிறார். மல்ஹார் தாக்கூர், மோனல் கஜார் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த மோனல் கஜார் தமிழில் வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது விக்னேஷ் சிவன் அறிவித்து இருக்கிறார்.