மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார்
ADDED : 1008 days ago
இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அயோத்தி. இப்படம் ரசிகர்களிடம், விமர்சகர்களிடம் பாராட்டைப் பெற்றது. வெற்றி பாதையை தக்க வைத்துக் கொள்ள கதை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் 13 வருடம் கழித்து மீண்டும் படம் இயக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது இயக்கத்தில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் சுப்பிரமணியபுரம், ஈசன்.
இப்போது பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப்பை கதாநாயகனாக வைத்து படம் இயக்குகிறார் சசிகுமார். இந்த படம் பீரியட் காலத்தில் நடக்கும் படமாக உருவாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.