உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியலில் ரீ-என்ட்ரியாகும் மவுனிகா!

சீரியலில் ரீ-என்ட்ரியாகும் மவுனிகா!

சினிமாவில் தனது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த மவுனிகா, சின்னத்திரையிலும் பல ஹிட் சீரியல்களில் நடித்து முத்திரை பதித்தார். மவுனிகாவின் நடிப்பில், 'நிம்மதி உங்கள் சாய்ஸ் -2', 'சொந்தம்', 'சொர்க்கம்' ஆகிய தொடர்கள் குறிப்பிடத்தக்கவை. 2009ம் ஆண்டு வரை ஆக்டிவாக நடித்து வந்த மவுனிகா அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து 'ஆய்த எழுத்து' தொடரில் தான் நடிக்க வந்தார்.

அதில், காளியம்மாள் கதாபாத்திரத்தில் மிரட்டிய அவர் மீண்டும் 3 ஆண்டுகள் கழித்து தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் 'ஆஹா கல்யாணம்' தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் கோடீஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மவுனிகாவின் ரீ-எண்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !