காஜல் அகர்வால் படத்திற்கு கோர்ட் தடை
ADDED : 1067 days ago
காஜல் அகர்வால், ரெஜினா கெசன்ட்ரா, கலையரசன், யோகி பாபு, நடித்துள்ள படம் கருங்காப்பியம். இதனை டிகே இயக்கி உள்ளார். இதனை ஐ கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தை சஞ்சித் சிவா ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரள விநியோக உரிமையை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தை தயாரிப்பு நிறுவனமே நேரடியாக வெளியிட முயற்சி செய்து வருவதாகவும், இதனால் விநியோகஸ்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே படத்தின் வெளியீட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் சஞ்சித் சிவா ஸ்டூடியோ சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.