அன்பில் அவன் முதல் ஹைக்கூ வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...!
ஓடிடியில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அன்பில் அவன்
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அன்பில் அவன்'. திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற இந்த படம் நாளை(நவ., 20) சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது. முன்னதாக கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
418
தெலுங்கு இயக்குநர் கீர்த்தன் நாதகவுடா இயக்கத்தில், சைத்ரா ஜே. ஆச்சார், ரமேஷ் இந்திரா, சூர்ய ராஜ் வீரபத்தினி ஆகியோர் நடிப்பில் வெளியான திகில் படம் '418'. இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸில் நாளை(நவ., 20) வெளியாகவுள்ளது.
ஹைக்கூ
யுவராஜ் சின்ன சாமி இயக்கத்தில், நடிகர் ஏகன் மற்றும் ஸ்ரீதேவி அப்பல்லா நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஹைக்கூ'. இந்த படம் நாளை (நவ., 20) நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
கிரேஸி கல்யாணம்
பத்ரப்பா கஜுலா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் தருண் பாஸ்கரன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கிரேஸி கல்யாணம்'. இந்த படம் நாளை(நவ., 20) ஆஹாவில் வெளியாகவுள்ளது.
அனுமனா பக்சி(Anumana Pakshi)
தெலுங்கு இயக்குநர் விமல் கிருஷ்ணா இயக்கத்தில் ராக் மயூர், மெரின் பிலிப், பிரின்ஸ் செசில், அனன்யா அகுலா, சரித், பிரம்மாஜி, ராசி மற்றும் அஜய் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அனுமனா பக்சி'. இந்த படம் நாளை (நவ., 20) சன் நெக்ஸ்டில் வெளியாகவுள்ளது.
தி ப்ளூ ரோடு
தி ப்ளூ ரோடு வெப் சீரிஸ் நாளை மறுநாள்(நவ., 21) நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த கிரைம் திரில்லர் தொடர் 8 தொடர்களைக் கொண்டது குறிப்பிடத்தக்கது.