உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை: அப்பா நடிகர் மீது போலீசில் புகார்

தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை: அப்பா நடிகர் மீது போலீசில் புகார்


'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்ளிட்ட பல சீரியல்களில் அப்பா கேரக்டரில் நடித்திருப்பவர் ரவிச்சந்திரன். 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'மெட்ராஸ்', 'கபாலி' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். பேட்டி முடிந்ததும், பேட்டி எடுத்த 30 வயது தொகுப்பாளினியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதற்கு அந்த தொகுப்பாளினி கடும் எதிர்ப்பு தெரிவித்து திட்டி உள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் 'உன்னை உன் நிறுவனத்தில் இருந்து நீக்கினால் என்னிடம் வந்துவிடு நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த தொகுப்பாளினி அசோக் நகர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். புகாரின் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை தேடி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !