உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான் கானின் 'மாத்ருபூமி' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ்

சல்மான் கானின் 'மாத்ருபூமி' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ்

அபூர்வ லக்கியா இயக்கத்தில் சல்மான் கான் தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் 'மாத்ருபூமி'. இப்படத்தில் சித்ரங்கதா சிங், அனூப் பிக்ரம் ஷாஹி, பிரசாந்த் தமங் மற்றும் பலர் நடிக்கிறார்கள். படத்திற்கான பின்னணி இசையை 'கேஜிஎப்' படப் புகழ் ரவி பஸ்ரூர் அமைத்துள்ளார்.

ஷிவ் அரூர் எழுதிய 'இந்தியாஸ் மோஸ்ட் பியர்லஸ்' என்ற நூலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியான கல்வான் சண்டையின் போது வீரமரணம் அடைந்தவர் கர்னல் சந்தோஷ் பாபு. அவரை முன்னுதாரணமாக வைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு முதலில், 'பேட்டில் ஆப் கல்வான்' என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள். அதன் பின்பு, “மாத்ருபூமி - மே வார் ரெஸ்ட் இன் பீஸ்' என்று மாற்றினார்கள். டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு நேற்று 'யுஏ 16 +' சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !