உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி

2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி


சினிமா என்பது பரமபதம் விளையாட்டு போன்றது. எப்போது யாரை மேலே ஏற்றும், கீழே இறக்கும் என்பதைக் கணிக்கவே முடியாது. தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி பெறாமல் தவித்து வந்தவர் நடிகர் சூர்யா. 2013ல் வெளிவந்த 'சிங்கம் 2' படத்திற்குப் பிறகு அவரது படங்கள் பெரிய வசூலைக் குவிக்கவில்லை. ஓடிடியில் நேரடியாக வெளிவந்த 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' ஆகிய படங்கள்தான் அவருக்கு வரவேற்பையும், தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

இந்த ஆண்டில் அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. அவர் நடித்து மே மாதம் வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் 340 கோடி வசூலைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் வெளிவந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 240 கோடி வசூலைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

இப்போது 'சீன்' படம் 260 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த ஆண்டில் வெளிவந்த மூன்று படங்களின் வசூல் அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வமான வசூல் அறிவிப்புகள்.

அந்தக் கணக்கின்படி இந்த வருடத்தில் மட்டும் சூர்யா படங்கள் 840 கோடி வசூலைப் பெற்றுள்ளன.

ஒரு பக்கம் சூர்யா 3 படங்கள் மூலம் 840 கோடி வசூலித்திருந்தாலும், ரஜினிகாந்த் தனது 'ஜெயிலர் 2' படம் மூலம் 840 கோடி வசூலைக் கடந்துள்ளார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !