உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன்

பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன்

எதார்த்தமான படங்களை இயக்குவதற்குப் பெயர் பெற்றவர் பாலா. இயக்குனர் வெற்றிமாறனுக்கும், இவருக்கும் திரையுலகில் நல்ல நட்பும், பரஸ்பர மரியாதையும் உள்ளது. இந்த இரு இயக்குநர்களும் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் பயிற்சி பெற்றவர்கள். இருப்பினும், இதுவரை எந்தப் படத்திலும் இவர்கள் இணைந்து பணியாற்றியதில்லை. இந்நிலையில் பாலாவின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளார் வெற்றிமாறன். கின்னஸ் உலக சாதனையாளர் லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய படத்தில் புதுமுகங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனராம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பிரபலமான நட்சத்திரங்களை மட்டுமே நம்பியிருக்காமல், புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இப்படம் உருவாகவுள்ளது. மேலும், அருண் விஜய் நாயகனாக நடித்த வணங்கான் படத்தை கடைசியாக பாலா இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் திரைக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !