நயன்தாரா, மாதவன், சித்தார்த் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!
ADDED : 956 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. திருமணம், குழந்தைகளுக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அதேப்போல் நடிகர் மாதவன் தமிழ், இந்தி மொழிகளில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் சித்தார்த் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஒய்-நாட் சசிகாந்த் முதல் முறையாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை அவரே தயாரிக்கின்றார். இதில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்து நடிக்கின்றனர். கிரிக்கெட் கதை களத்தை மையமாக கொண்டுள்ள இந்த படத்திற்கு 'தி டெஸ்ட்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.