கொட்டும் மழையில் ஏழைகளுக்கு உணவளித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்
                                ADDED :  935 days ago     
                            
                             நயன்தாரா நடிக்கும் 75வது படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. அவருடன் ஜெய்,  சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கும்  இந்த படத்தை நீல் கிருஷ்ணா இயக்குகிறார். தமன்  இசை அமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தங்களது குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட்ட விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர், சாலை ஓரத்தில் உள்ள மக்களுக்கு உணவளித்து உள்ளனர். இருவரும் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி இருக்கிறார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இப்படி  கொட்டும் மழையில் அவர்கள்  ஏழைகளுக்கு உணவளிப்பதை  பார்த்த நெட்டிசன்கள் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.