சூர்யா 42வது படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்
ADDED : 1170 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 42வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திஷா பதானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ‛கங்குவா' என டைட்டில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ‛கங்குவா' படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் வாங்கி உள்ளது. அதுகுறித்த ஒரு தகவலை சரிகம நிறுவனம் ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறது. அதோடு இந்த படத்தின் ஆடியோ உரிமை 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சூர்யா இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தின் ஆடியோ உரிமைதான் அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.