தனுஷ் பட இயக்குனர் உடன் இணையும் துல்கர் சல்மான்!
ADDED : 1061 days ago
நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம் துல்கர் சல்மான். இந்த படத்தை சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ரங்டே, வாத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெங்கி அட்லூரி படத்தை இந்நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.