ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல்!
ADDED : 909 days ago
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த ஏப்ரல் 14 அன்று வெளியான திரைப்படம் ருத்ரன். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இந்த படத்தை அவரே இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரங்களில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் நடித்துள்ளனர். இப்படம் கலவை விமர்சனம் பெற்றாலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.