கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட நடிகர்!
ADDED : 1160 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம், 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை குற்றாலத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அமெரிக்க நடிகர் எட்வர்ட் சொனின்ப்ளிக் இணைந்துள்ளார் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் இதற்கு முன்பு ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .