மேலாடையின்றி போஸ் : அதிர வைக்கும் பாயல் ராஜ்புத்
தமிழில் வினய் நடித்த இருவர் உள்ளம் என்ற படத்தில் நடித்தவர் பயல் ராஜ்புத். அதையடுத்து இவர் கோல்மால், ஏஞ்சல் போன்ற படங்களிலும் நடித்தார். தற்போது இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் 'செவ்வாய்கிழமை' என்ற படத்தில் 'ஷைலஜா' கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். இவரது அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் அவர் மேலாடையின்றி தைரியமாக போஸ் கொடுத்துள்ளார். பாயல்ராஜ்புத் ஏற்கனவே ‛ஆர்.எக்ஸ்100' படத்தில் இதே இயக்குனருடன் கைகோர்த்துள்ளார். இப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.
அஜய் பூபதி கூறுகையில், ‛‛கிராமத்தை மையமாக வைத்து 90களில் நடக்கும் ஆக்ஷன் திரில்லர் கதை இது. பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். இப்படத்தைப் பார்த்த பின் பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு மக்களின் நினைவில் இருக்கும்,'' என்றார்.