உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குஸ்திக்கு எப்போதும் தயார் - ஐஸ்வர்ய லட்சுமி

குஸ்திக்கு எப்போதும் தயார் - ஐஸ்வர்ய லட்சுமி

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛கட்டா குஸ்தி'. இந்த படத்தில் குஸ்தி வீராங்கனையாக அசத்தியிருந்தார் ஐஸ்வர்ய லட்சுமி. அதேசமயம் இந்தப்படம் கணவன் - மனைவி இடையேயான ஈகோ மோதலையும் அழகாக விவரித்து இருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் 2 பட புரொமோஷன் பணியில் பிஸியாக உள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. இந்தபடத்திற்காக பல பேட்டிகளையும் அவர் வழங்கி வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‛‛அதை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டாம் பாகம் உருவானால் அதில் எப்போது வேண்டுமானாலும் நான் நடிக்க தயார்'' என்றார் ஐஸ்வர்ய லட்சுமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !