ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி
ADDED : 4 minutes ago
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த நவம்பர் 21ம் தேதி திரைக்கு வந்த படம் தீயவர் கொலை நடுங்க. இந்த படத்தில் அர்ஜுன் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கருப்பர் நகரம், மோகன் தாஸ் மற்றும் கன்னடத்தில் உத்தரகாண்டா போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார் . இந்த நிலையில் தற்போது அவர் ஓ சுகுமாரி என்ற புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
திருவீர் என்பவர் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பரத் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. கங்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்டரை நடிகர் திருவீர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.