பாக்கியலெட்சுமி தொடரில் மீண்டும் நடிப்பாரா சதீஷ்?
பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து நடிகர் சதீஷ் திடீரென விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இனி அவர் நடிப்பில் 10 முதல் 15 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகும் என கூறியிருந்தார். இதனையடுத்து சதீஷின் ரசிகர்கள் பலரும் 'கோபி கதாபாத்திரத்தில் உங்களை தவிர யாரும் நடிக்க முடியாது. சீரியலில் தொடர்ந்து நடியுங்கள்' என வேண்டுகோள் வைத்து வந்தனர். பாக்கியலெட்சுமி தொடரில் சதீஷுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வீஜே விஷால், 'என் அப்பாவை எங்கேயும் போக விடமாட்டேன்' என சதீஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்தார்.
மேலும், சதீஷ் அண்மையில் வெளியிட்ட ஒரு வீடியோவிலும், 'நான் விலகுவதாக சொன்னதும் நிறைய பேர் போகாதீங்கன்னு சொல்லியிருக்கீங்க. ஷூட்டிங் பிசியா போறதுனால எல்லாருக்கும் ரிப்ளை பண்ண முடியல. உங்க அன்புக்கு ரொம்ப நன்றி' என கூறியுள்ளார். அதேசமயம் இம்முறை பேசிய வீடியோவில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகுவது குறித்து எதுவும் சொல்லவில்லை. எனவே, அவர் மீண்டும் கோபியாக தொடர்வார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.