மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
857 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
857 days ago
அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை சினிமாவாவது அதிகரித்துள்ளது. ஓடிடி தளங்களில் இதுபோன்ற படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதும் அதற்கு காரணம். அரசியல் தலைவர்களில் ஏற்கெனவே காந்தி, நேரு, நரேந்திரமோடி, மன்மோகன்சிங், ஜெயலலிதா, என்.டி.ராமராவ். ஒய்.ராஜசேகரரெட்டி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. தற்போது இந்திராவின் வாழ்க்கையை கங்கனா ரணவத் தயாரித்து, இயக்கி நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் முன்னாள் துணை பிரதமரும், ராணுவ அமைச்சருமான பாபு ஜெகஜீவன் ராம் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு 'பாபுஜி' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஜெகஜீவன் ராமாக மிலிட்டரி பிரசாத் நடிக்கிறார். திலீப்ராஜா டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் குண்டூரில் தொடங்கி ஸ்நடை பெற்று வந்தது. தற்போது இதன் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. வருகிற ஜூலை 6ம் தேதி ஜெகஜீவன்ராம் நினைவு நாளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
857 days ago
857 days ago