மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
857 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
857 days ago
அஜித்தின் 52வது பிறந்நாளை முன்னிட்டு அவரது முதல் தமிழ் படமான அமராவதி நேற்று தியேட்டர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது. 1993ம் ஆண்டு வெளியான இந்த படத்தை செல்வா இயக்கி இருந்தார். சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நாசர், விசித்ரா, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
அமராவதி மறுவெளியீடு குறித்து சங்கவி கூறியிருப்பதாவது: அமராவதி தான் எனக்கும், அஜித்துக்கும் முதல் படம். அந்த படத்தில் நாங்கள் நடித்தபோது பள்ளி மாணவ மாணவி போன்றே இருப்போம். இருவரையும் நடிக்க வைக்க இயக்குனர் செல்வா ரொம்பவே சிரமப்பட்டார். அமராவதியில் நான் நடிக்கும்போது எனக்கு 14 வயது. 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிற்காலத்தில் நானும், அஜித்தும் முன்னணி நடிகர், நடிகை ஆனோம்.
ஒரு படம் வெளியாவதே சிரமமான இந்த காலகட்டத்தில் 30 வருடங்களுக்கு முந்தைய ஒரு படம் மறுவெளியீடாவது ஆச்சர்யமான விஷயம். அது என் படத்திற்கு நடந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் படத்தில் பணியாற்றிய அனைவரையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
857 days ago
857 days ago