துல்கர் சல்மான் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது
ADDED : 894 days ago
நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, துல்கர் சல்மானின் அடுத்த தெலுங்கு படத்தை வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்த படம் அடுத்த வருடம் சம்மருக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.