உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் பொன்னியின் செல்வன்-2 வசூலை முறியடித்த பிச்சைக்காரன்-2!

தெலுங்கில் பொன்னியின் செல்வன்-2 வசூலை முறியடித்த பிச்சைக்காரன்-2!

கடந்த 2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் பிச்சைக்காரன். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்திருக்கிறார். இப்படம் கடந்த 19ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது.

1500 தியேட்டர்களில் வெளியாகியுள்ள இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் 3.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேசமயம், தெலுங்கில் இந்த படம் முதல் நாளில் 4.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-2 படம் தெலுங்கில் முதல் நாளில் 2.8 கோடி வசூலித்த நிலையில் பிச்சைக்காரன்- 2 படமோ 4.5 கோடி வசூலித்து அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது. அதோடு பிச்சைக்காரன்- 2 படம் இரண்டாவது நாளில், உலகம் முழுக்க 15 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !