மேலும் செய்திகள்
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா
836 days ago
'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம்
836 days ago
அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு
836 days ago
கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. தமிழ்த் திரையுலகத்திலிருந்தும் சில கலைஞர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒருவர். அங்கு 'கில்லர்ஸ் ஆப் த பிளவர்ஸ் மூன்' என்ற திரைப்படத்தின் பிரிமீயர் காட்சியை கண்டு ரசித்துள்ளார். அது பற்றிய சில வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட 'ஸ்பைடர்மேன் 1,2,3' படங்களின் கதாநாயகன் டோபே மக்குயர் உடன் செல்பி ஒன்றை எடுத்து அதைத் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
“உங்களது நட்பான அடுத்தவீட்டு மனிதருடன்” என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் 62 படத்தை இயக்குவதிலிருந்து விலகிய விக்னேஷ் சிவன், கடந்த சில நாட்கள் முன்பு வரை பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்த போட்டோக்களைப் பதிவிட்டிருந்தார். தற்போது கேன்ஸ் சென்று அந்த விழாக்கள் பற்றிய புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்க உள்ள அடுத்த படத்தில் நடிப்பதாகச் சொல்லப்படும் பிரதீப் ரங்கநாதனும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
836 days ago
836 days ago
836 days ago