எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய தமன்னா
ADDED : 863 days ago
தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் மற்றும் சுந்தர். சி இயக்கி வரும் அரண்மனை-4 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்கள் தமன்னா. இது தவிர தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் படத்திலும் நடிக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் 21 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள தமன்னா, தனது சம்பந்தப்பட்ட வீடியோ புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருபவர், தற்போது தான் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். அதோடு தான் தனது உடல் எடையை 10 கிலோ குறைப்பதற்கு முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ள தமன்னா, தனது பயிற்சியாளரின் உதவியுடன் ஒவ்வொரு நாளும் தீவிரமான ஒர்க்அவுட்டில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.