உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்

பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சில நாட்களுக்கு முன்பாக, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு நடிகை திரிஷா, தனது வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் மூலமாக கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: மாநில அரசியலில் உயர்ந்த நிலை வகிக்கும் ஒருவரின் இழிவான மற்றும் அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சி உடனும் தொடர்பில் இல்லை. அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை. இதற்கு முன்பும் தொடர்ந்து தெரிவித்ததுபோல், அரசியல் விவகாரங்களில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறேன்.

என்னுடைய கலைத் திறமையால் மட்டுமே என்னை மதிப்பிட வேண்டும்; அரசியல் தொடர்புகள் என்ற குற்றச்சாட்டுகளால் அல்ல. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் விவாதப் பொருளாக்கக் கூடாது என்பது பொதுவான நெறிமுறை. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புணர்ச்சியுடனும் சமநிலையுடனும் நடந்து கொள்ள வேண்டும். எனது பெயரை எனக்கு தொடர்பில்லா விவகாரங்களில் இழுக்க வேண்டாம். இவ்வாறு அதில் திரிஷா கூறியுள்ளார்.

வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்
நடிகை திரிஷா குறித்து பேசியதற்காக வருந்துகிறேன். வாய் தவறி வந்துவிட்டது. தனிநபர் விமர்சனங்களை நான் அனுமதிப்பதில்லை. இதற்காக யாரேனும் வருத்தப்படுவார்களே ஆனால் உண்மையில் நான் அதற்காக மனதார வருத்தம் தெரிவிக்கிறேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

கொங்கு தமிழன் பிரசாந்த்
2026-02-16 16:58:43

இவளோ பெரிய கண்டனம் தெரிவித்த த்ரிஷா அவர்கள், நயினார் அண்ணன் சொன்ன விடயம் பொய் என்று மறுக்கவில்லையே?