மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
861 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
861 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
861 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன்பிறகு விஜய்யின் 68வது படத்தை வெங்கட்பிரபு இயக்க உள்ளார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வந்தது. இந்த நிலையில் லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து தான் நடித்த அனுபவங்களை மீடியா பேட்டிகளில் பகிர்ந்து வரும் மிஷ்கின், தற்போது விஜய்யை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்க தான் திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு விஜய்யிடம் நான் எப்போது அப்பாயின்மென்ட் கேட்டாலும் உடனே தருவார். நான் சொல்லும் கதையை கேட்பதற்கும் அவர் தயாராக இருக்கிறார். என்றாலும் அப்படி நான் அவருக்கும் சொல்லும் கதை மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். அந்த கதை அவருக்கும் எனக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய்க்கு ஏற்ற ஒரு கதையை தற்போது தயார் செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார் மிஷ்கின்.
861 days ago
861 days ago
861 days ago