உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நல்ல படங்களை மிஸ் செய்து என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன் - அங்காடி தெரு பட நடிகர்

நல்ல படங்களை மிஸ் செய்து என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன் - அங்காடி தெரு பட நடிகர்

கடந்த 2010ம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அங்காடித் தெரு. இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் மகேஷ். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அஞ்சலி பிசியான நடிகையாக மாறினார். ஆனால் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஷ் அதன் பிறகு சில படங்கள் நடித்தும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.

சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் மகேஷ் அவர் கூறுகையில்; ஈட்டி, சுந்தரபாண்டியன், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதை தவற விட்டுவிட்டேன். 'அங்காடித் தெரு' படத்திற்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரி கதைகளை தேர்வு செய்ய வேண்டும்? என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை. அதனாலேயே இது போன்ற படங்களை தவறவிட்டு என் சினிமா வாழ்க்கை வீணாகி விட்டது என்று வருத்ததோடு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !