உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10வது படத்திலும் புது இயக்குனரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன்

10வது படத்திலும் புது இயக்குனரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன்


நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஆனால் இவர் மற்ற நடிகர்களை போன்று இல்லாமல் தான் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அருண் ராஜா காமராஜ் (கனா), கார்த்திக் வேணுகோபால் (நெஞ்சமுண்டு நேர்மையுண்டு), சிபி சக்ரவர்த்தி (டான்), பி.எஸ்.வினோத்ராஜ் (கொட்டுக்காளி), டி.ராஜவேல் (ஹவுஸ்மேட்), சிவகுமார் முருகேசன் (தாய்கிழவி) ஆகியோர் சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள்.

இவர்கள் வரிசையில் அடுத்து தனது எஸ்.கே புரொடக்ஷன் சார்பில் தயாரிக்க இருக்கும் 10வது படத்தை அம்மாமுத்து சூர்யா என்பவர் இயக்குவதாக அறிவித்துள்ளார். 'தாய்கிழவி' படத்தின் வெற்றி விழாவில் இதனை அறிவித்தார். தற்போது அம்மாமுத்து சூர்யா ஸ்கிரிப்ட் தயாரிப்பு பணியில் இருப்பதாகவும் அந்த பணிகள் முடிந்த உடன் படப்பிடிப்பு செல்ல இருப்பதாகவும், இது இளைஞர்களுக்கான காதல் மற்றும் ரொமான்ஸ் படமாக இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் கூறினார்.

அம்மாமுத்து சூர்யா, முன்னதாக ஆர்.ஜே.பாலாஜியை வைத்து 'ஹேப்பி எண்டிங்' எனும் படத்தை இயக்கினார். படத்தின் டைட்டில் டீசர் மட்டும் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், சில பிரச்னைகளால் அப்படம் நின்றது. அதன்பிறகு, தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படம் மூலம் அறிமுகமாக உள்ளார் அம்மாமுத்து சூர்யா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !